’அண்ணாத்த’ படத்தின் மருதாணி பாடல்: குஷ்பு, மீனா செம ஆட்டம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மருதாணி என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.

டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பாக குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் ஆடும் ஆட்டம் செமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை பார்க்கும்போது கீர்த்தி சுரேஷ்க்கு திருமண வாழ்த்து ரஜினிகாந்த் கூறுவது போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் கலர்புல்லாக பிரமாண்டமாகவும் ஏராளமான துணை நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment