சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ சென்சார் சான்றிதழ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘அண்ணாத்த’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த டீசரை அடுத்து படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த் ஜோடியாக மீனா குஷ்பு நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment