‘அண்ணாத்த’ படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று முன் தினம் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தந்த போதிலும் இந்த படம் முதல் நாளிலிருந்தே ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகள் இந்த படத்தை பார்ப்பதற்காக தியேட்டரை நோக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் முதல் நாள் 35 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் இதுவரை அதிக வசூல் செய்த சர்க்கார் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி ‘அண்ணாத்த’ திரைப்படம் இரண்டாவது நாளாக 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் இரண்டே நாட்களில் இந்த படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் இன்று அல்லது நாளை இந்த படம் 100 கோடி ரூபாயை எட்டி விடும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் வசூல் குறித்த நிலவரங்களை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment