அண்ணாத்த ஃபர்ஸ்ட்லுக்: பட்டு வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டு ரஜினி!

696b68dc7fd4deed7e1c44daa13fea35

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. பட்டு வேஷ்டி பட்டு சட்டை கூலிங் கிளாஸ் ஆகியவற்றில் மாஸ் காட்டும் ரஜினிகாந்தின் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

இந்த போஸ்டரில் ரஜினியின் போஸ் அனேகமாக ரஜினியின் ஆரம்ப பாடலின் காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த  படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.