‘அண்ணாத்த’ திருவிழா ஆரம்பம்: சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு!

8882afc532877a146bf6c6f8d0afc5ee

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் திருவிழா ஆரம்பமாகி விட்டதாக சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது 

நாளை அதாவது விநாயகர் சதுர்த்தி தினத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை மாலை 6 மணிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 

இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டதை அடுத்து ‘அண்ணாத்த’ திருவிழா தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.

ரஜினிகாந்த் ஜோடியாக மீனா, குஷ்ப நடிக்க மேலும் முக்கிய கேரக்டர்களில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார்.,

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.