வேலையில்லாமல் சும்மா பேசிகிட்டு இருக்கீங்க; நாங்க அத பாக்கணுமா? மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்!

நம் தமிழகத்தில் தற்போது பாஜக தலைவராக காணப்படுகிறார் அண்ணாமலை. அண்மைக்காலமாக அவருக்கும் தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் காணப்பட்டு வருகிறது.அண்ணாமலை செந்தில் பாலாஜி

இந்த நிலையில் தமிழகத்தின் மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

மின்துறை மீது புகார் அளித்து அவர்கள் 24 மணிநேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என்றும் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார். சமூக வலைதளங்களில் போகிறபோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்தக் கூடாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றசாட்டுகளை ஆதாரமின்றி சுமத்தக் கூடாது என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அரசின் மீது அவதூறு பரப்புவதே நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

அரசின் மீது ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.மின்துறையில் அனைத்து திட்டப் பணிகளையும் வெளிப்படைத்தன்மையுடன் நம் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment