மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, சமூக வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என கட்சி தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
தி.மு.க., கோப்புகளுக்கு பதிலடி கொடுத்த அவர் கூறியது: அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல. அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது, எப்படி கிடைத்தது? என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் கேள்வியாகவே உள்ளது.
இதுவரை என்ன நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை .மேலும், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி இருப்பதால், அ.தி.மு.க.,வில் உள்ள அனைவரும் புனிதர்களாக மாற மாட்டார்கள்.அ.தி.மு.க.,வினர் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்.இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கு கூட்டணி வைத்து வாயை மூடிக்கொண்டு இருந்தால், ஊழல் கட்சியுடன் ஏன் கூட்டணி என்று கேள்வி எழுப்புவோம், நேர்மையாக இருந்தால், அ.தி.மு.க.,வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு, நடவடிக்கை எடுங்கள்,” என, அண்ணாமலையிடம் கூறினார்.
கோவை செல்வராஜ் திமுகவின் துணைச் செயலாளராக நியமனம்!
ஊழல் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், அதிமுகவின் ஊழலையும் வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் கேட்டுக் கொண்டார்.