அதிர்ச்சியை அள்ளி கொடுத்த அண்ணாமலை; தமிழகத்திற்கு நீட்தேர்வு தேவை!

தமிழகத்தில் நாளைய தினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தமிழகத்திற்கு தேவையற்றது என்பதை வலியுறுத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.

இதற்கு ஆளும் கட்சி மட்டுமில்லாமல் தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆதரவளித்து இருந்தது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்திற்கு நீட்தேர்வு தேவை என்பதை நாளைய தினம் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்துவார் என்று பாஜக சார்பில் கூறியுள்ளது.

நீட் தேர்வு தமிழகத்திற்கு கட்டாயம் தேவை என்பதை நாளை அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்துரைப்போம் என்று அண்ணாமலை கூறினார். நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

அதோடு மட்டுமில்லாமல் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கு பஞ்சாப் அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். தமிழகத்திற்கு நீட்தேர்வு தேவை என்று அண்ணாமலை கூறியது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment