ஸ்டாலின் என்ன சர்வாதிகாரியா? கீதா ஜீவன் என்ன மகாராணியா? அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சர்வாதிகாரியா? என்றும் அமைச்சர் கீதாஜீவன் என்ன மகாராணியா? என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்ற பகுதிக்கு செல்ல உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவின் மாவட்ட தலைவர் உள்பட ஒரு சிலரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின், திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர், மானூர் ஒன்றியத் தலைவர் சுப்புதுரை ஆகியோரை இன்று (26/12/2022) அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என பதிவு செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.