Connect with us

அடுத்த சர்ச்சைக்கு ரெடியாகும் அண்ணாமலை !! கொந்தளிக்கும் திமுக ..

202108120843172026 Tamil News Tamil News Annamalai says PM Modi sown hope in minds farmers SECVPF

தமிழகம்

அடுத்த சர்ச்சைக்கு ரெடியாகும் அண்ணாமலை !! கொந்தளிக்கும் திமுக ..

அடுத்த சர்ச்சைக்கு ரெடியாகும் அண்ணாமலை !! கொந்தளிக்கும் திமுக ..

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே உள்ள காளிமலை உச்சியில்  துர்கா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெளர்ணமியையொட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார்.

இதனிடையே இரத்த தான கொடையாளர்கள், இயற்கை விவசாய்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரியர், இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர் மற்றும் சிறந்த மருத்து ஆன்மீக யூட்டூப்பர் ஆகியோர்களுக்கு விருது வழங்கினார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: யாரோ வந்து அமைச்சராகவோ, சட்ட மன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை. கட்சி தொண்டர்கள், தலைவர்கள் நம்மை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஆன்மா சுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டு அந்த பாதையில் நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம். நாம் நம்மை தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளை இடுவான் என கூறினார்.

இதனை தொடர்ந்து  மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும். நம் ஆட்சி அமையும் என கூறினார்.

மேலும், பழங்குடியின மக்களிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து அவர்களோடு கலந்துரையாடியபோது ஆளும் கட்சிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதால்  கட்சி தலைமையினர்  கோபமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top