மீண்டும் கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை.. அதிரடி உத்தரவு..!

மீண்டும் கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை.. அதிரடி உத்தரவு..!

கர்நாடக மாநில தேர்தல் பணிக்கு செல்லுமாறு அண்ணாமலைக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவி ஏற்றார் என்பதும் அவர் தமிழக பாஜக தலைவராக பதவி ஏற்றதிலிருந்து பாஜக மக்கள் மத்தியில் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் அண்ணாமலை குறித்த செய்தியை தான் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன என்பதும் தினமும் ஏதாவது ஒரு செய்தியில் அவர் தலைப்பு செய்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திமுகவுக்கு சிம்ம சொப்பனமாகவும் உண்மையான எதிர்கட்சியாகவும் பாஜக தான் அண்ணாமலை தலைமையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் கூட அவரது ஆளுமை அதிகமாக உள்ளதாகவும் அவரது கருத்து கேட்ட பின்னர் தான் அதிமுகவின் இரு அணிகளும் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக அண்ணாமலை மாறி இருக்கும் நிலையில் தற்போது அவரை கர்நாடக மாநில தேர்தல் பணி குழு பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களையும் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும் நியமனம் செய்திருப்பதாக பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் தமிழக அரசியலில் ஈடுபடுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு கர்நாடக தேர்தல் பணிகளை செய்வார் என்றும் கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க அவர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.