Connect with us

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவு: எந்த இணையதளத்தில் பார்ப்பது?

Tamil Nadu

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவு: எந்த இணையதளத்தில் பார்ப்பது?

d07a4c762f42b40d8b6bef804f5290db

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு முடிவை எந்த இணையதளத்தில் பார்ப்பது என்பது குறித்த முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடந்தது என்பதும் அதேபோல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்தது என்பதும் தெரிந்ததே 

இந்த தேர்வுகளின் தேர்வு தாள்கள் கடந்த சில மாதங்களாக திருத்தப்பட்ட நிலையில் இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய இரண்டு இணையதளங்களில் இந்த தேர்வு முடிவுகளை காணலாம் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது 

மேலும் இன்று காலை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க இந்த இணைய தளத்திற்கு வந்ததால் இணையதளம் ஸ்தம்பித்தது என்றும் இருப்பினும் சில நிமிடங்களில் இணையதளம் மீண்டும் இயங்கி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top