Connect with us

அண்ணா பல்கலைக்கழகம்-ஆன்லைன் தேர்வு அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் முழுவதும் ஆன்லைன் டெஸ்ட் தானாம்!!

அண்ணா பல்கலைக்கழகம்

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம்-ஆன்லைன் தேர்வு அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் முழுவதும் ஆன்லைன் டெஸ்ட் தானாம்!!

அண்ணா பல்கலைக்கழகம்-ஆன்லைன் தேர்வு அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் முழுவதும் ஆன்லைன் டெஸ்ட் தானாம்!!

மாணவர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது நிறைவேறியுள்ளது. ஏனென்றால் அவர்கள் ஆன்லைன் தேர்வுகளுக்காக தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அடுத்தடுத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நேரடி தேர்வு முறையை அறிவித்திருந்தது. இதனால் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்பு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் சந்தோசம் நிலவிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஆன்லைன் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி அண்ணா பல்கலை கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி மாதம் ஆம் தேதி முதல் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகிவிட்டது.

செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்  அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top