தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாண்டஸ் புயல் புதுவையில் – ஸ்ரீஹரிகோட்டா கடற்கரையில் நிலைகொண்டுள்ளது. இது மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டு இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலை கூறியுள்ளது.
அதோடு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னை பல்கலைகழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று அண்ணா பல்கலைக் கழகங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.