அண்ணா ,எம்ஜிஆர் சமாதிகள் மூடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

புயல் காரணமாக மரங்கள் விழுந்து விட்டதால் இன்று அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிகள் மூடப்படும் என்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது ஏராளமான மரங்கள் விழுந்து உள்ளதை அடுத்து அந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மான்டஸ் புயல் காரணமாக மரங்கள் விழுந்து விழுந்து உள்ளதால் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரங்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் நாளை தலைவர்களின் நினைவு இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி சாலைகளில் படிந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு ஊழியர்கள் விடிய விடிய சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்றும் அவர்களுக்கு தனது பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.