Connect with us

சமந்தாவை மிஞ்சிருவாங்க போல அஞ்சலி! டான்ஸ்னா அப்படி இருக்கணும்.. வைரல் வீடியோ!

Copy of feature image 80 165692362316x9 1

பொழுதுபோக்கு

சமந்தாவை மிஞ்சிருவாங்க போல அஞ்சலி! டான்ஸ்னா அப்படி இருக்கணும்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி. இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்திஇருப்பார் . அதைத்தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் .

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

1373125579 singham 2 1

இந்நிலையில் சில முன்னணி நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் .அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் நடிகர் சூரியாவின் சிங்கம் 2 படத்தில் அஞ்சலி ஒரு மாஸான டான்ஸ் ஆடியிருப்பார்.அது ரசிகர்களின் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது.

 

தற்போழுது முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார் . அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

anjali new dance video

அதை தொடர்ந்து நடிகை அஞ்சலியும் தெலுங்கில் நிதின் நாயகனாக நடித்து வரும் ‛மச்சேர்லா நியோஜெகவர்கம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடலில் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியது போன்ற காஸ்ட்டியூமில் நடனமாடியுள்ளார் அஞ்சலி. அந்த போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அஞ்சலி நடனமாடியுள்ள RaRa Reddy I Am Ready என்ற ஸ்பெஷல் பாடல் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top