வனிதா, ஜூலி, பாலாஜியிடம் மாட்டிக்கொண்ட அனிதா! என்ன ஆகப் போகிறார் தெரியவில்லையே….

மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்.  பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்கள் இதில் கலந்து கொண்ட அதிலும் குறிப்பாக சுவாரஸ்யத்தை ஊட்டிய போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதன்படி பாலாஜி முருகதாஸ், அனிதா, வனிதா, அபிராமி, சுரேஷ், சினேகன் போன்ற முக்கிய போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட்டுற்குள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் தினம்தோறும் புது புது டாஸ்குகளை கொடுக்கிறது.

அதன்படி நேற்று செலிபிரிட்டி டாஸ்கு ஒன்றைக் கொடுத்தது. இதில் ஒரு குழுவினர் செய்தியாளர்கள் ஆகவும் ஒரு குழுவினர் செலிபிரிட்டிகளாகவும் கலந்து கொண்டனர். இந்த போட்டி இன்று வரை நடைபெற்று வருகிறது.

இதில் செலிபிரிட்டியாக அனிதா அமர்ந்திருந்தார். அவரிடம் ஜூலி கேள்வி கேட்க பதிலளித்தார் அனிதா. பின்னர் பாலாஜி முருகதாஸ் நீங்கள் வனிதாவிடம் மட்டும்தான் கேள்வி கேட்பேன் என்று குறிப்பிட்ட சிலர் மட்டும் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு அனிதாவின் முகம் மாறியது.

அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று அனிதாவை வனிதா சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment