பிக்பாஸ் வீட்டிற்கு எவிக்ட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஏற்கனவே அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் வந்திருந்த நிலையில் நேற்று சனம், சம்யுக்தா, ஆஜித், சுசித்ரா மற்றும் வேல்முருகன் ஆகியோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் அனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். சமீபத்தில் தனது தந்தையை இழந்த சோகத்தில் இருக்கும் அனிதாவை அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது போன்ற காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன
மேலும் இந்த முதல் முதல் புரமோவை கூர்ந்து கவனித்த பார்வையாளர்கள் ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்து வருகின்றனர். அதுதான் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருமே இந்த முதல் புரமோவில் காணவில்லை. பல காட்சிகள் இந்த முதல் புரமோவில் இருந்த போதும் ஒரு காட்சியில்கூட ஆரி, பாலாஜி ஆகிய இருவருமே இல்லை என்பது சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
இரண்டாவது புரமோவிலும் ஆரி, பாலாஜி இல்லை என்றால் ஏதோ மர்மமான விஷயம் பிக்பாஸ் வீட்டில் நடந்திருக்கின்றது என்றுதான் அனைவரும் நினைக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
#Day101 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6PGKCVeFcI
— Vijay Television (@vijaytelevision) January 13, 2021