பிக்பாஸ் டீமை குறை கூறிய அனிதா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

b25e6a37e63381b299febca3598944f8

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அனிதா சம்பத் சமீபத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. ஆரியுடன் அவர் சண்டை போட்டதால் தான் ஆரி ரசிகர்கள் அவரை திட்டம் போட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் சமீபத்தில் அனிதா சம்பத் தந்தை எதிர்பாராத வகையில் மரணமடைந்தார் என்பதும் அவருடைய மறைவால் பெரும் துயரத்தில் இருந்த அனிதா, தற்போதுதான் மீண்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ef47c78b7ec7df016559ab5f08f16a64

இந்த நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் தான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளும் ஒரு முக்கிய விஷயம் குறித்து பேசியதாகவும் ஆனால் தான் பேசிய எந்த ஒரு காட்சிகளும் ஒளிபரப்ப ஒளிபரப்ப படவில்லை என்றும் இதனால் தான் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

குறிப்பாக திங்கட்கிழமை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்தும், செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் குறித்தும், புதன்கிழமை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் குறித்தும், வெள்ளிக்கிழமை விதவைகள் மறுமணம் குறித்தும் பேசியதாகவும் ஆனால் தான் பேசிய ஒரு நிகழ்வுவை கூட ஒளிபரப்பவில்லை என்பது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் பிக்பாஸ் டீமை அவர் குறைகூறி தெரிவித்தார் 

இருப்பினும் நான் பேசியவற்றை சமூகவலைதளங்கள் மூலம் மீண்டும் பேச இருக்கிறேன் என்றும் வரும் பிப்ரவரி மாதம் முதல் அதனை எதிர்பார்க்கலாம் என்றும் அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்

96addd4287b2a9340d526c91264f1f64

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.