
Entertainment
பீஸ்ட் படத்தின் ஒரிஜினல் பின்னணி இசையை வெளியிட்ட அனிருத்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட் . பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என பல தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்த படம் அதிரடி – திரில்லர் திரைப்படமாக வெளியானது.இத்திரைப்படம் 2022 ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.
அதற்கு முன்பாகவே ‘அரபிக் குத்து’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் ஹிட் அடித்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் இதுவரை 40 கோடிக்கு மேல் பார்வைகளைக் கடந்தும் 6 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் அதன் பின்னணி இசை வெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பாசிட்டிவாக அமைந்த அனிருத்தின் பின்னணி இசை ஒரிஜினலாக வெளியிடப்பட்டுள்ளது. இதை அனிருத் நேற்று வெளியிட்டுள்ளார். அதில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
Here we go! #BeastBGM #BeastOST https://t.co/9ebAVsDYhZ
Advance happy birthday dear Thalapathy @actorvijay sir @Nelsondilpkumar @sunpictures
All these tracks are so close to our hearts ❤️🚀 Enjoy 🥁🥳— Anirudh Ravichander (@anirudhofficial) June 20, 2022
அதை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
நடிகர் ஜெய் மிஸ் பண்ணுன வெற்றி படம் எது தெரியுமா?
