மனைவி ‘அதுக்கு’ ஒத்துவராததால் ஆணுறுப்பை வெட்டிக் கொண்ட கணவன்; உயிருக்கு போராட்டம்!

பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் மனைவி குடும்பம் நடத்த வராததால் தனது ஆணுறுப்பை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள மாதேபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட ராஜ்னி நயநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர பாசுகி என்பவரது 25 வயதான மகன் கிருஷ்ணா பாசுகிக்கும், கோல்பாரா பகுதியைச் சேர்ந்த சோட் லால் பாசுகி என்பவரது மகள் அனிதாவிற்கும் திருமணமாகி மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கிருஷ்ணா பஞ்சாபின் மண்டியில் வசித்து வருகிறார். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜ்னி நயநகரில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அனிதாவும் தனது பெற்றோரை காணச் செல்வதாக சொல்லிவிட்டு, கோல்பாரா பகுதிக்குச் சென்றுள்ளார்.

தாய் வீட்டிற்குச் சென்ற அனிதாவை கிருஷ்ணா பலமுறை அழைத்தும் அவர் குடும்பம் நடத்த வரவில்லை எனக்கூறப்படுகிறது. அனிதாவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அனிதா, கிருஷ்ணாவின் வீட்டிற்கு திரும்ப விருப்பம் இன்றி, தாய் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா மனைவியை வர வைப்பதற்காக தனது ஆணுறுப்பை வெட்டிக்கொண்டுள்ளார். வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.