தேர்வில் Fail ஆக்கியதால் ஆத்திரம்.. ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள்!

வட மாநிலங்களை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் அட்டூழியம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில்  தேர்வில் Fail ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் என்ற கிராமத்தில் பள்ளியில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேர்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதால் Fail ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவர்கள் முறையாக சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தற்போது
காயமடைந்த ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment