ஐநாவில் இருந்து திடீரென விலகும் பிரபல நடிகை.. 20 ஆண்டு சேவைக்கு முற்றுப்புள்ளி!

ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதுவர் பதவியில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து சேவை செய்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தற்போது அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 1982 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் என்பதும் குழந்தை நட்சத்திரம் முதல் அவர் நாயகியாக நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார் என்றும் குறிப்பாக ஆஸ்கார் விருதையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

angelina1ஐநா அமைப்பில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில் அவர் அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாகவும் அமைப்புகள் மூலமும் உதவி செய்து வந்தார்.

இந்த நிலையில் 20 ஆண்டுகளாக என்னால் முடிந்த சேவையை செய்து கொடுத்து விட்டேன் என்றும் அதனால் தற்போது அதிக பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது சேவையை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.