அங்கன்வாடி உணவில் பல்லி: 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட வீரபுடையான் பட்டியில் அரசு துவக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்திலும் மாணவிக்கு வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது மாணவி ஒருவரின் தட்டில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து உடனடியாக ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் மாணவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதே சமயம் பெற்றோர்கள் தரப்பில் பள்ளி கட்டிடம் முற்றிலுமாக இடிந்துள்ளதாகவும், தற்போது வரையில் கட்டப்பட வில்லை என்பதால் சத்துணவு மையம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.