அங்கன்வாடி உணவில் பல்லி! 9 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!

அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 குழந்தைகள் உட்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பனையங்கால் கிராமத்தில் அங்கன்வாடியில் இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பள்ளி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த அங்கன்வாடி பணியாளர் யாரும் இந்த உணவை சாப்பிட வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும் 9-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 7 குழந்தைகள் உட்பட 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

அதே சமயம் அங்கன்வாடியை முற்றுகையிட்டதாக தெரிகிறது. மேலும், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment