இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிசாசு 2 இல் ஆண்ட்ரியா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் முதன்மையாக தமிழில் எடுக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி சிறப்பு கேமியோவில் நடிக்கிறார்.
‘பிசாசு 2’ படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா,’பிசாசு 2′ படத்தின் மூலம் மீண்டும் இசையமைப்பாளராக வரவிருக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் உச்சந்தலா ரெகயிலி ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
பிசாசு 2 புதிய கதையாக இருக்கும், முதல் பாகத்துடன் அதற்கு எந்த தொடர்பும் இருக்காது. பிசாசு 2-ன் தெலுங்கு பதிப்பு – பிசாச்சி 2 முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜுவின் மூலம் வெளியாகிறது.
தற்போழுது தயாரிப்பாளர்கள் பிசாசு 2 இல் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘நெஞ்சை கெழு’வை வெளியிட்டனர். இது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா என்கே பாடிய ஒரு ஆத்மார்த்தமான பாடலாக கபிலனின் வரிகளுடன் இருந்தது. ஏறக்குறைய 5 நிமிட நீளமுள்ள பாடல் வீடியோவில் ஆண்ட்ரியா மற்றும் பிரியங்காவின் அழகான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஐபிஜா தீவிவில் சுற்றி திரியும் நயன் – விக்கி ஜோடி ! ரொமான்ஸ் போட்டோஸ் !
‘பிசாசு 2’ படத்தின் சில முக்கிய பகுதிகளை படமாக்க சாலைகள் இல்லாத காட்டுக்குள் மிஷ்கின் பயணம் செய்துள்ளார்.