ஆந்திராவில் பெட்ரோல்: இதுக்கு சென்னையே பெட்டர்! சென்னையை விட பத்து ரூபாய் அதிகம்!!

தற்போது இந்தியாவில் பெரும் பிரச்சினையாக காணப்படுவது பெட்ரோல் டீசல் விலை ஆகும். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேலாக விற்கப்படுகிறது.பெட்ரோல், டீசல்

இவ்வாறிருக்கையில் தற்போது டீசல் விலையும் நூறு ரூபாய்க்கு மேலாக விற்கப்பட்டு வருகிறது சென்னையில் மட்டும் இன்றைய தினம் பெட்ரோல்  105 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் சராசரியாக மூன்று நாளைக்கு ஒரு ரூபாய் என்ற நிலையில் உயர்ந்துகொண்டே விற்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் டீசலின் விலையும் 101.25 ரூபாய் என்ற விலைக்கு உயர்ந்து விற்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் சென்னையை காட்டிலும் அதிக விலைக்கு பெட்ரோல் டீசல் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதன்படி அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஆனது 114.81 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது சென்னையில் பெட்ரோல் மதிப்பைவிட கிட்டத்தட்ட பத்து ரூபாய் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமில்லாமல் டீசலின் விலை லிட்டருக்கு 107.34 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது சென்னையை விட ஆறு ரூபாய் அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment