செப்டம்பர் மாதம் புது வீட்டுக்கு குடிபெறப்போகும் முதல்வர்; வெளியானது அதிரடி அறிவிப்பு!

செப்டம்பரில் இருந்து ஆந்திர மாநில தலைநகரான விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகத்தை நடத்தப்போவதாகவும், அங்கேயே குடியேறப்போவதாகவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி:

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் முலபேட்டையில் பசுமை வயல் துறைமுகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

இதேபோல், நௌபாடாவில் துறைமுகம் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார். ஈச்சர்லா மண்டலத்தில் புதகட்லபாலம் மீன்பிடி துறைமுகம் மற்றும் ஹிரா மண்டலத்தில் வம்சதாரா லிப்ட் ( நீரேற்று ) பாசன திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் பேசுகையில் மாநிலம் முழுவதும் நிர்வாகப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.

விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்வு:

செப்டம்பரில் இருந்து விசாகப்பட்டினத்திலேயே நானும் எனது வீட்டில் தங்குவேன். விசாகப்பட்டினம் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகரம். தொடர்ந்து செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களால் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் முகம் சித்திரம் மாற உள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை புறக்கணித்தனர். இனி மூலப்பேட்டை வளர்ச்சியின் தூணாக இருக்கும்.

அரசியல் தர்ம யுத்தத்தில் உங்கள் குழந்தை ஜெகன் ஒரு பக்கம் தனியாக இருக்கிறேன். அனைவருக் ஒன்று சேர்ந்து என்னுடன் ஒரு இருண்ட யுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வது. அவர்களைப் போல் பொய் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. இந்தப் போரில் என் தைரியம், நம்பிக்கை மற்றும் உங்கள் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையே.
மாவட்டங்களின் வளர்ச்சி என்பது பிராந்தியங்களுக்கு இடையிலான மோதல்களை அகற்றுவதாகும்.

ஒவ்வொரு பிரதேசத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். உங்கள் வீட்டில் நல்லது நடந்து என நீங்கள் நினைத்தால் உங்கள் பிள்ளைக்கு துணையாக இருங்கள். உங்கள் பிள்ளையின் சிப்பாயாக இருங்கள் என முதல்வர் ஜெகன் மோகன் அழைப்பு விடுத்தார்.

35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு:

ஸ்ரீகாகுளம் மாவட்டம் எதிர்காலத்தில் பெருநகரமாக வளர வேண்டும். மூலப்பேட்டை துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த துறைமுகம் பல லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது. மீனவர்களின் வாழ்வில் வெளிச்சம் கொண்டுவர மீன்பிடி துறைமுகங்கள் கட்டி வருகிறோம். எதிர்காலத்தில் ஸ்ரீகாகுளம் மற்றொரு மும்பை மற்றும் சென்னையாக ஆக மாறும். துறைமுகத்தின் கொள்ளளவு 100 மில்லியன் டன்னாக உயரும். மீன்பிடி துறைமுகங்கள் கட்டுவது கங்கை புத்திரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதாகும். இந்த துறைமுகத்துடன் மேலும் இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.

365 கோடி செலவில் புத்தகட்லபாளையம் கடற்கரையில் மீன்பிடி துறைமுகம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேலும் 4 துறைமுகங்களை தொடங்கப்பட்டுள்ள்து என்று முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிதிரி அப்புலராஜு, தர்மபிரசாத ராவ், குடவாடா அமர்நாத், சபாநாயகர் தம்மினேனி சீதாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.