சர்ஜரி கத்தியால் மருத்துவ கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த காதலன்: அதிர்ச்சி சம்பவம்

மருத்துவர்கள் சர்ஜரி செய்யும் கத்தியால் மருத்துவ கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் என்ற பகுதியில் 20 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் ஞானேஸ்வர் என்பவருடன் நட்பு கொண்டார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து ஞானேஸ்வரர் கல்லூரி மாணவியை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த அவர் போலீசில் புகார் செய்தார்/ போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்த பிறகு மாணவியிடம் இனிமேல் தொடர்பு கொள்ளக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்த நிலையில் அவரது வீட்டுக்கே வந்து ஞானேஸ்வர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு வெளியே ஓடினார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றபோது தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். இதனையடுத்து அவரை பிடித்த அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.