11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான சில நிமிடங்களில் 9 மாணவர்கள் தற்கொலை: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆந்திர மாநிலத்தில் தேர்வு முடிவு வெளியான ஒரு சில மணி நேரங்களில் 9 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவிரத்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் மாநிலம் முழுவதும் ஒன்பது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அடுத்தடுத்து வெளியான தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரு மாணவர் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்னொரு மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும், 16 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியதாகவும், இன்னொரு மாணவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே உள்ளது தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலும் தூக்கில் தொங்கி தான் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் ரிப்போர்ட் தெரிவித்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் நடந்த 11-ஆம் வகுப்பு தேர்வில் 61% மாணவர்களும் 12 ஆம் வகுப்பு தேர்வில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் எழுதிய நிலையில் நேற்று உண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் மற்றும் மனநல மருத்துவர்கள் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் தேர்வு மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப் போவதில்லை என்றும் மாணவர்கள் இன்னும் சந்திக்க வேண்டிய பல சவால்கள் உள்ளது என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.