உண்ணாவிரம்! ஆந்திர முதல்வரின் சகோதரிக்கு உடல்நலக்குறைவு..!!

ஹைதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆந்திர முதல்வரின் தங்கை பாதயாத்திரை சென்றபோது கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவருடைய கார் அடித்து நொறுக்கப்பட்டது.

அதே சமயம் புகார் அளித்த போது போலீசார் சர்மிளாவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் முன்ஜாமீன் காரணமாக வெளியே வந்தார். அதே சமயம் மறுபடியும் பாதயாத்திரை தொடரக்கூடாது என அரசு கூறியது.

ஹிமாச்சல் முதல்வராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு!!

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் மேடை அமைத்து அனுமதி வழங்க வேண்டும் என இரண்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

அதே சமயம் இன்று காலை முதல் அவருக்கு உடல்நிலை மோசமானதாக தெரிகிறது. இதனால் போலீசார் அவரை அழைத்து சென்று தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அதிர்ச்சி! நேருக்கு நேர் மோதிய பைக்… 2 பேர் பலி!!

இதற்கிடையில் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சர்மிளாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.