வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை பாமக குழுவினர் சந்தித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
தமிழக சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்ததாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து சாதகமான நடவடிக்கையை எடுப்போம் என முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசு நினைத்தால் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் இது தொடர்பான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சேகரித்து விடலாம் என கூறியுள்ளார்.
மேலும், 10.5 இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்ததாகவும் , இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.