.சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி அவர்கள் கமலாலயம் சென்றுவிட வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ உதயநிதி பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த முறை எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததை குறிப்பிட்டார். தற்போது தாம் பேசுவதற்கு வெளிநடப்பு செய்யாதிருப்பது நன்றி என தெரிவித்தார்.
அப்படியே வெளிநடப்பு செய்தாலும் கடந்த முறை போல தனது காரில் மாற்றி ஏறிவிட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியை பார்த்து கூறினார். காரில் ஏறி நாளும் கமலாலயம் சென்று விட வேண்டாம் என தெரிவித்தார்.
இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தங்களின் கார் எப்போதும் எம்ஜிஆர் மாளிகைக்கு மட்டுமே செல்லும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் திருநங்கைகள் வாரியத்தில் அனைத்து திருநங்கைகளும் உறுப்பினர்களாக பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுத்து நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என வலியுறுத்தினார்.