Connect with us

75 பேருக்கு சம்மன்; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதி இன்றி நடைபெற்ற கூட்டம்!!

kapaleeswarar temple 1

தமிழகம்

75 பேருக்கு சம்மன்; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதி இன்றி நடைபெற்ற கூட்டம்!!

தற்போது நம் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் முதலில் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அனுமதி பெறாவிட்டால் கூட்டம் நடத்தியவர்களுக்கு தண்டனையும் அபராத தொகையும் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் கோயிலில் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதால் சம்மன் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடந்துள்ளது.

அதன்படி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 75 பேருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிக்க மயிலாப்பூர் போலீஸ் முடிவு எடுத்துள்ளது.

கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க  உறுதிமொழி ஏற்போம் என பாஜக கவுன்சிலர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தலைமையில் 31ஆம் தேதி கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக அறநிலையத்துறை அதிகாரி காவேரி மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்து தமிழர் கட்சித் தலைவர் ரவி உள்ளிட்ட 75 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top