Connect with us

மாணவியின் பெற்றோர் கண்டிப்பாக பேட்டி தர வேண்டாம்-உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!!

high court

தமிழகம்

மாணவியின் பெற்றோர் கண்டிப்பாக பேட்டி தர வேண்டாம்-உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!!

தற்போது உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மூன்று மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

மறு பிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தை தனது வழக்கறிஞர் கேசவனுடன் இருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். மறு உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவும் செய்ய நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மறு பிரேத பரிசோதனைக்கு பின்னர் வேறு எந்த பிரச்சனையும் செய்யாமல் மாணவி உடலை பெற வேண்டும் என்றும் கூறினார். மாணவி இறுதிச்சடங்கு அமைதியாக நடக்க வேண்டும் வழக்கு விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி கூறினார்.

மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது அவர்கள் மீது இரக்கப்படுகிறேன் என்று நீதிபதி கூறினார். இந்த நிலையில் மாணவி உடலை மறுபரித பரிசோதனை செய்யும் மூன்று மருத்துவர்கள் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது.

மருத்துவர்கள் கீதாஞ்சலி, ஜூலியான ஜெயந்தி மற்றும் கோகுலநாதன் இந்த குழுவில் உள்ளனர். ஓய்வு பெற்ற தடவியல் துறை நிபுணர் சாந்தகுமாரியும் மறு பிரேத பரிசோதனை நடைபெறும் போது உடன் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top