தமிழகத்தில் உள்ல அரசு பள்ளிகளில் கடந்த 2009-ம் ஆண்டு முன்பு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.8,370-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் பணி நிர்ணயம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
அரசின் இத்தகைய செயலலால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதில் 200-க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலிண்டர் விலை எதிரொலி: ஹோட்டல், டீ விலை உயரும் அபாயம்!!
அதே சமயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.
தற்போது சமவேலை சம ஊதியம் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் நாளே இப்படியா? சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!!
அதே போல் இதற்காக நிதித்துறை செயலாலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.