Connect with us

வடிவேல் பட பாணியில்.. நிலத்தை காணவில்லையென கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போராட்டம் நடத்திய நபர்..

WhatsApp Image 2022 08 26 at 5.43.20 PM

செய்திகள்

வடிவேல் பட பாணியில்.. நிலத்தை காணவில்லையென கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போராட்டம் நடத்திய நபர்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையத்தில் இடத்தை காணவில்லை என்று கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்து தனி நபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குலமங்கலம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் மாரி சின்னையா. இவரது மகன் தங்கவேலு. இந்நிலையில் மாரிசின்னையா என்பவருக்கு சொந்தமான 17 சென்ட் இடம் இருந்துள்ளது.

அதற்கான ஆவணங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த நிலையில் அதே இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் முறைகேடாக பட்டா பெற்று ஆக்கிரமித்து வேலி அமைத்து உள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்

அவரது வீட்டிற்கு தண்ணீர் கூட எடுக்க செல்ல வழியின்றி தவித்து வருவதாகவும் இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த மாரி சின்னையாவின் மகன் தங்கவேலு இன்று ஆலங்குடி பேருந்து நிலையத்தில் தனக்கு சொந்தமான தனது தந்தை மாறி சின்னையாவின் இடத்தை காணவில்லை என்று கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்து அங்கு அமர்ந்து நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இவருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள மகாலிங்கம் என்பவர் 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை கேட்டு இவருக்கு நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் குற்றம் சாட்டி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தங்கவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைக்கு தீர்வு காண வருவாய்த்துறை நிமிடம் அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top