தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இவர் எடுத்த போட்டோ மூலமே இவர்பிரபலமானார். பின்னர் கலக்கபோவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
கடந்த அக்டோபர் 4-ந்தேதி விஜய் டிவியில் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஜனவரி 17-ந்தேதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது. இதில் வின்னராக ஆரியும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் ரியோ மூன்றாவது இடங்களையும் பிடித்தனர். இந்த போட்டியில் நடிகை ரம்யா பாண்டியன் 100 நாட்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். கடைசி நாளில்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற ரம்யா பாண்டியனுக்கு குடும்பத்தினரும் ரசிகர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.