News
ஆதார் கார்டு போட்டோவை மாற்ற ஒரு எளிய வழி!
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை பார்க்கும் போது சிலர் தாங்கள் தானா என்று சந்தேகப்படும் அளவிற்கு புகைப்படங்கள் இருக்கும். ஆதார் கார்டு புகைப்படங்கள் குறித்து பல மீம்ஸ்களும் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ஒவ்வொரு இந்தியருக்கும் அடையாள அட்டை போன்று இருக்கும் ஆதார் அட்டையில் புகைப்படங்கள் சரியாக இல்லை என்றால் பலருக்கும் நெருடலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆதார் அட்டையில் லேட்டஸ்டான புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி உள்ளது. இதன்படி ஆதார் அட்டையில் புகைபடத்தை மாற்ற விரும்புபவர்கள் ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று கோரிக்கை விடுத்தால் அவர்கள் ஒரு விண்ணப்பம் தருவார்கள்
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தை கட்டினால் ஆதார் அட்டை சேர்க்கை மையத்தின் போட்டோகிராபர் லேட்டஸ்ட் புகைப்படத்தை எடுத்து அந்த புகைப்படத்தை உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்துவிடுவார். அதன் பின்னர் உங்கள் புகைப்படம் தெளிவானதாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மங்கலாக இருப்பவர்கள் இதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
