சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதுப்பிக்க ரூ.29 கோடி ஒதுக்கீடு!

முன்னொரு காலத்தில் நூலகங்களுக்கு சென்று நூல் படிக்கும் முறை அனைவரிடம் காணப்பட்டது. தற்போது இவை அதிசயமாக பார்க்கப்படுகிறது. நூலகத்தில் அனைத்து எழுத்தாளர்கள் வரலாற்று புத்தகங்கள் என பல ஏராளமான புத்தகங்கள் காணப்படும்.

நூலகத்தில் கடைபிடிக்கப்படும் மிக முக்கிய கடமை அமைதி காத்தல் ஆகும். இந்தநிலையில் நம் தமிழகத்தில் நூறு ஆண்டுகளை தாண்டி மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்து வருகிறது சென்னை அண்ணா நூலகம்.

இந்த சென்னை அண்ணா நூற்றாண்டு  நூலகத்தை புதுப்பிக்க ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதுப்பிக்க ரூபாய் 29 கோடி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

அரசு ஒதுக்கிய ரூபாய் 29 கோடியிலிருந்து ரூபாய் 15 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மீதமுள்ள ரூபாய்  14 கோடியில் மின் சீரமைப்பு பணிகள் மற்றும் புதிய மின்சாதன பொருட்கள் வாங்கப்பட உள்ளன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது பொதுப்பணித்துறை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment