திமுக அரசு தலைமையிலான வேளான் பட்ஜெட் 3வது முறையாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.
ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
வரும் விவசாயிகளுக்கு நிதியாண்டில், 10 ஆதிதிராவிட சிறு, குறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், ஆக மொத்தம் 11 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள், சூரிய சக்தி உலர்த்திகள், குளிர் சாதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த உ பண்ணையம், பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் போன்ற உயர்மதிப்பு இனங்களுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.