Connect with us

மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையா?: ஈபிஎஸ்-ஓபிஎஸ்

ஓபிஎஸ் ஈபிஎஸ்

செய்திகள்

மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையா?: ஈபிஎஸ்-ஓபிஎஸ்

மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையா?: ஈபிஎஸ்-ஓபிஎஸ்

நம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அடுத்தடுத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடு, அலுவலகம், இடங்களில் தொடர்ந்து வருமான வரி சோதனை, லஞ்ச ஒழிப்பு துறை சோதனை அடுத்தடுத்து நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான ஐம்பத்தி ஒன்பது இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர். அதில் 11 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத பணத்தினை பறிமுதல் செய்தனர்.

இதற்கு  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதா? என்று கேள்வி கேட்டுள்ளனர்.

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் இன்று கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியது என்றும் இந்த சோதனை கண்டிக்கத்தக்கது என்றும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top