Connect with us

தைப்பூச நாளில் 11 வயது சிறுமியை நிலாவுக்குத் திருமணம் செய்து திண்டுக்கல்லில் கும்மியடித்து வழிபாடு!

Untitled 69

செய்திகள்

தைப்பூச நாளில் 11 வயது சிறுமியை நிலாவுக்குத் திருமணம் செய்து திண்டுக்கல்லில் கும்மியடித்து வழிபாடு!

தைப்பூச நாளில் 11 வயது சிறுமியை நிலாவுக்குத் திருமணம் செய்து திண்டுக்கல்லில் கும்மியடித்து வழிபாடு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தேவி நாயக்கன்பட்டியில் தைப்பூச நாளில் ஒவ்வொரு ஆண்டும் நிலாப்பெண் வழிபாடு நடத்தப்படு வருகின்றது.

அந்த ஊரில் வசிக்கும் 10 வயதுக்கும் குறைந்த சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவரை நிலாவின் மனைவியாக பாவித்து ஆவாரம்பூ கொண்டு அலங்காரம் செய்வர்.

அதன்பின்னர் சிறுமிகள், பெண்களும் நிலாப் பெண்ணை தாரை தப்பட்டைகள் முழங்க கோவிலுக்கு அழைத்துச் சென்று கும்மி அடித்து பாட்டுப்பாடி மரியாதை செலுத்துவது உண்டு.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற தைப் பூச விழாவில் விஸ்வநாதன்-விசாலாட்சி தம்பதியின் 11 வயது மகள் பிரதிக்சாவை நிலா பெண்ணாக தேர்வு செய்து ஆவாரம் பூவால் அலங்காரம் செய்தனர்.

அதன்பின்னர் மாடச்சியம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க சரளை மேட்டில் உள்ள பகுதிக்கு அழைத்து வந்து ஆவாரம்பூ கூடையைத் தலையில் வைத்து மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

ஒவ்வரு கோவிலிலும் சிறுமிகளும், பெண்களும் பாட்டுப்பாடி, கும்மியடித்து வழிபாடு செய்தனர்.

அதன் பின்னர் இறுதியாக மாடச்சியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தாய்மாமன் கட்டிய கீற்று குடிசையில் அமர வைத்து மீண்டும் கும்மியடித்து பாட்டுப்பாடினர்.

இரவு முழுவதும் நடைபெற்ற வழிபாட்டினை அதிகாலை நிலா மறையும் நேரத்தில் ஆவாரம்பூ கூடையில் தீபம் ஏற்றி அதனை கிணற்றில் மிதக்க விட்டு பண்டிகையினை முடித்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top