கேப்டன் டாஸ்க்கில் வென்றும் அமுதவாணனுக்கு பெரும் ஏமாற்றம்: காரணம் இதுதான்!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கேப்டன் டாஸ்க் மற்றும் நாமினேஷன் படலம் நடத்தப்படும் நிலையில் இன்றைய கேப்டன் டாஸ்க்கில் இறுதியில் அசிம் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் மோதினர்.

இருவரும் ஒரு கயிற்றால் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் கீழே சிதறிக் கிடக்கும் பரிசுகளை எடுத்து அவரவர் பெட்டிகளில் போட வேண்டும் என்றும் அதிகமாக பரிசுகளை எடுத்து பெட்டிகளில் போடுபவர் தான் இந்த வார கேப்டன் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து இருவரும் ஆவேசமாக கீழே விழுந்த பரிசுப் பொருள்களை எடுத்து தங்கள் பெட்டியில் போடுகின்றனர். இறுதியில் பரிசுகளை எண்ணிப் பார்த்தபோது அமுதவாணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் டாஸ்க்கில் வென்றவர்கள் அந்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்பதும் தெரிந்ததே.

ஆனால் இந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் வெற்றிபெற்றும் அமுதவாணனின் பெயரை நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்துள்ளது அமுதவாணனுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.