பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக விலைவாசி உச்சத்திற்கு சென்றிருக்கும் நிலையில் பால் விலை தற்போது திடீரென லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் பால் நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்று அமுல் நிறுவனம் என்பதும் இந்நிறுவனம் பால் விலையை உயர்த்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமுல் நிறுவனம் பால் விலையை ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

தனை அடுத்து அமுல் கோல்ட் பால் விலை ஒரு லிட்டர் 66 என்றும், அமுல் தாசா பால் விலை ஒரு லிட்டர் 54 என்றும், அமுல் பசும்பால் ஒரு லிட்டர் 56 என்றும், அமுல் எருமை பால் ஒரு லிட்டர் 70 என்று உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 3 முதல் இந்த புதிய விலை அமலுக்கு வரும் என்று அமுல் பால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த இயக்க செலவு மற்றும் பால் உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாக இந்த விலை உயர்வு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக கால்நடை தீவன செலவு மட்டும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அமுல் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பால் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் பால் விலை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது பொது மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வரும் நிலையில் தற்போது தனியார் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews