Connect with us

இனி மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ 5000 கிடையாது! 6000 ரூபாயாக அதிகரிப்பு!!

fishing ban

News

இனி மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ 5000 கிடையாது! 6000 ரூபாயாக அதிகரிப்பு!!

இனி மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ 5000 கிடையாது! 6000 ரூபாயாக அதிகரிப்பு!!

நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். அவர் தமிழகத்தின் முதல் முறையாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார், மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக காணப்படுகிறது.ஸ்டாலின்

தற்போது நம் தமிழகத்தில் மழை காலம் என்பதால் பெரும்பாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அவர்களுக்கு உதவும் வகையில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை அதிகரித்துக் கூறியுள்ளார். அதன்படி மீன்பிடி தடைக்கால நிவாரண 6 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் 5,000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக அதிகரித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனால் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு 108 கோடி நிவாரண தொகை தரப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீன்பிடி தடை காலத்தில் கடலுக்கு செல்ல முடியாத மீனவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிவாரண தொகையை மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top