அமோனியா வாயு கசிவு: பொதுமக்களுக்கு மூச்சு திணறல்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் புயல் காரணமாக அதிகளவு காற்று மற்றும் கடல்சீற்றம் காணப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பவங்கள் வசிக்கும் நிலையில் அப்பகுதியை சுற்றி தனியார் நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்நிறுவனங்களுக்கு அமோனியா போன்ற வாயுக்கள் கொண்டுவரப்படுவதாகவும், தற்போது நிலவி வரும் காற்றின் சீற்றத்தினால் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற கோளாறுகள் உண்டாகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

180 கி.மீ தென்கிழக்கில் மையம்… மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்..!!

இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் கண் எரிச்சல் போன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து சென்றதாக கூறியுள்ளனர்.

“மாண்டஸ் புயல்” – மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமா?

மேலும், இது குறித்து சென்னை மாநகராட்சி ஆய்வு நடத்த வேண்டும் எனவும், அமோனியா வாயு கசிவால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.