திமுக கோட்டைக்குள் சிங்கிளாக நுழையும் அமமுக! அதுவும் எந்த மாநகராட்சி என்று நீங்களே பாருங்க;
நேற்றைய தினம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, அதில் திராவிட முன்னேற்றக் கழகமே பெருவாரியான வார்டுகளை கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சியான அதிமுக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திமுக கூட்டணிக் கட்சிகளும் பாஜகவும் ஆங்காங்கே கணிசமான இடங்களை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திமுகவின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அந்த 200 வார்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் சுமார் 153 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சியான அதிமுக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸும் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு திமுக, அதிமுக, காங்கிரஸ் மட்டுமே இருந்த நிலையில் பாஜக மற்றும் அமமுக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
சென்னையில் 11வது மண்டலமான வளசரவாக்கத்தில் 148 வது வார்டில் அமமுக வேட்பாளர் கிரிதரன் வெற்றி பெற்றுள்ளார் .அதிமுக குடும்பத்தை சேர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு அமமுகவின் மதுரவாயில் பகுதி செயலாளராக உள்ளார்.
இந்த வார்டில் பதிவான 13000 வாக்குகளில் கிரிதரன் 5014 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஒரு வார்டில் வெற்றி மூலம் சென்னை மாநகராட்சியில் அமமுக முதல் முறையாக நுழைகிறது.
