அமமுகவில் இணைந்த பாடகர் மனோ

பிரபல பின்னணி பாடகர் மனோ. பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே நீ என்ன சொன்ன பாடலின் மூலம் அறிமுகமாகி தேன்மொழி எந்தன் தேன்மொழி, மதுர மரிக்கொழுந்து வாசம் உள்ளிட்ட ஆரம்ப கால படங்களின் பாடல்கள் மூலம் பிரபலம் ஆனவர்.

f4142881aa2d5bed530ae01b364aae5f-1

இசைஞானி இளையராஜாவின் சீடர் இவர். இளையராஜாதான் இவரின் நாகூர் என்ற பெயரை மாற்றி சினிமாவுக்காக மனோ என்று மாற்றி வைத்தவர்.

சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்திருக்கும் மனோவின் இனிமையான குரலுக்காக ஹிட் ஆன பாடல்களும் அதன் மூலம் ஹிட் ஆன படங்களும் ஏராளம்.

எந்த கட்சி ஆர்வலராகவும் தன்னை காட்டிக்கொள்ளாத இவர் நேற்று டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment