அமமுக வேட்பாளருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவா? பரபரப்பு போஸ்டர்!
அமமுக வேட்பாளர் ஒருவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆதரவு கொடுத்ததாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தீவிரமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் அமமுக வேட்பாளர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக முதல்வர் அவர்களின் நல்லாசியுடன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு கோரி தென்காசி மாவட்டம் கடையம் தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகர் என்பவர் போஸ்டர் ஒட்டி உள்ளார்
இந்த போஸ்டர் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் எப்போது அமமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார் என்ற கேள்வியை பலர் எழுப்பினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
